
நமக்கு உடலில் வீக்கம் மற்றும் வலி ஏற்படுவதற்கான காரணம் ?புரோஸ்டாக்லாண்டின் (prostaglandins) என்ற வேதிப்பொருள் உடலில் சுரப்பதால் தான் ஏற்படுகிறது. இது நமது இரத்தநாளங்களில் இயற்கையாக உள்ள ஒரு வேதிப்பொருள். உடலில் அடிபட்டு காயம் ஏற்படும் பொழுது இந்த வேதிப்பொருள் தானாக சுரந்து வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக தான் நமக்கு வலிகள் ஏற்படுகின்றன. மேலும் இந்த வேதிப் பொருள் நமது சிறு மூளை பகுதியில் சுரப்பதனால் தான் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சல் ஏற்படுகிறது.

acetylsalicylic acid(aspirin)
இந்த வேதிப்பொருள் உடலில் சுரப்பதை கட்டுப்படுத்த ஆஸ்பிரின்(Aspirin) மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள். ஆஸ்பிரின் மாத்திரைகளை சாப்பிடுவதால் உடல் வலி, வீக்கம் ,காய்ச்சல், இவை அனைத்திலும் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. மேலும் இந்த மாத்திரை நமது உடலில் இரத்தம் உறைவதை தடுக்கிறது, இதனால் உடலில் இரத்த கட்டிகள்(blood clotting) ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

ஹார்ட் அட்டாக்(heart attack) வந்தவர்களுக்கு இந்த மாத்திரையை முதலுதவி சிகிச்சையாக கொடுப்பார்கள், ஏனென்றால் இதயத்தில் உள்ள அடைப்பை நீக்குகிறது. தினசரி இந்த ஆஸ்பிரின் மாத்திரைகளை உட்கொள்பவர்கள் உடலில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும், ஏனென்றால் இவர்களுக்கு அடிபட்டால் ரத்தம் உறைவது சற்று கடினம். இந்த தன்மைதான் இந்த மாத்திரையின் குறைபாடாக பார்க்கப்படுகிறது.
コメント