
ஏலக்காய் என்றாலே நம் ஞாபகத்திற்கு வருவது இதன் நறுமணம் தான்.இந்த நறுமணத்திற்கு மயங்காத ஆட்களே மிகவும் குறைவு.

ஏலக்காயில் 1,8 சினியோல்(1,8 cineole) என்ற வேதிப் பொருள் உள்ளது. ஏலக்காயின் நறுமணத்திற்கு இதுவே காரணம்.

இதனின் மருத்துவ பயன்கள்:-
ஏலக்காயில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்ட்(anti-oxidant) உள்ளதால் புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்கிறது. மேலும் தோல்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது.
இது தீராத இருமலையும் கட்டுப்படுத்த பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஆஸ்துமாவையும் இது குணப்படுத்துகிறது.
ஏலக்காய்,பாம்பு மற்றும் தேள் விஷங்களுக்கு எதிராக செயல்பட்டு நம்மை உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் ஏலக்காய் உணவு நச்சுக்கு (food poison) மருந்தாக பயன்படுகிறது.
இது உடலில் ஏற்படும் வீக்கங்கள் மற்றும் தலைவலிக்கு மருந்தாக பயன்படுகிறது.
ஏலக்காய் வயிற்றில் ஏற்படும் புண்களை(ulcers) குணப்படுத்துகிறது.
இது பற்பசை மற்றும் பற்களில் ஏற்படும் தொற்றுக்களை முற்றிலும் நீக்குகிறது.
ஏலக்காய்,நம் உடலில் இருக்கும் நச்சுக்களை முற்றிலுமாக வெளியேற்றி நம் உடலை பாதுகாக்கிறது.
ஏலக்காய் டீ குடிப்பதினால் தலைவலி மற்றும் மன அழுத்தம் குறைகிறது.
தினமும் ஏலக்காயை தேனில் கலந்து உண்பதினால் கண் பார்வை அதிகரிக்கிறது.
இது சிறுநீர் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கிறது

Comments