நமது அன்றாட வாழ்வில் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க சிறந்த உணவுகள் இருந்தாலும் மன நலமும் மிகவும் முக்கியம். நமது எண்ணங்களுக்கு பின்னால் வேதியியல் உள்ளது என்பது அறிவியல் பூர்வமான உண்மை. நாம் மகிழ்ச்சியுடனும் நேர்மறையான எண்ணங்களுடன்(positive thinking) இருக்கும் பொழுது நமது உடலில் டோபமைன்(dopamine), ஆக்ஸிடாஸின்(oxytocin), செரோடோனின்(serotonin) ஆகிய நன்மை செய்யும் வேதிப்பொருட்கள் நமது உடலில் இயற்கையாக சுரக்கின்றன. இவைகளால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் நல்ல ஆரோக்கியத்துடன் செயல்பட வைக்கிறது ,மூளையின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் காண வைக்கிறது, நம்பிக்கையை அதிகரிக்கிறது, அதுமட்டுமல்லாமல் கவலை மற்றும் பயம் போன்ற எதிர்மறை எண்ணங்களை நீக்குகிறது.
இந்த வேதிப்பொருட்களின் அளவு உடலில் குறையும் பொழுது மகிழ்ச்சியின்மை, மன அழுத்தம், மனநிலையில் தடுமாற்றம், ஒரு செயலில் கவனம் செலுத்த முடியாத நிலை, கோபம், நம்பிக்கை இன்மை ஆகிய பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
இந்த வகையான மகிழ்ச்சி தரும் வேதிப்பொருட்களை இயற்கையாக உடலில் அதிகரிக்க சில வழிகள்.
நறுமணம் நிறைந்த மலர்களை முகர்வது மற்றும் வாசனை திரவியங்களை பயன்படுத்துவது இந்த வேதிப் பொருட்களின் அளவை அதிகரித்து மன அழுத்தத்தை போக்குகிறது. நல்ல தூக்கம், நேர்மறையான எண்ணங்கள், நல்ல பாடல் கேட்பது, உடற்பயிற்சி, யோகா, தியானம், அனைவரிடமும் நன்றாக பேசி பழகுவது(social bonding) போன்றவை இந்த வேதிப் பொருட்களின் அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால் கவலை மற்றும் பயம் நீங்கும், நம் மீது நமக்கு நம்பிக்கை வளரும், செயல்களில் கவனத்தை அதிகரிக்கும்.
இந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் நேர்மறையான எண்ணங்களுடன் இருப்பதே நம்மை அனைத்து வகையான பிரச்சனைகளிலிருந்து விடுபட வழிவகை செய்யும். இந்த உலகில் எதுவும் நிரந்திரம் இல்லை அதே போல் தான் நமக்கு வரும் துன்பங்களும் நிரந்தரமில்லாத ஒன்று. இதுவும் கடந்து போகும் என்று வாழ்ந்தால் வாழ்க்கையில் எதையும் நம்மால் எதிர்கொள்ள முடியும்!!
留言