
நாம் உண்ணும் உணவு செரிப்பதற்கு நமது வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உள்ளது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அந்த அமிலத்தை உற்பத்தி செய்வதற்கு நமது உடம்பில் இயற்கையாகவே சில ஹார்மோன்கள்
வேலை செய்கிறது, அதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். கிரெலின் (ghrelin) எனப்படும் ஹார்மோன் தான் நமது வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை உற்பத்தி செய்து நமக்கு பசியை ஏற்படுத்தும் ஹார்மோன் ஆகும்.

இது குறைவாக இருப்பின் நமக்கு அஜீரணக் கோளாறும், இது அதிகமாக இருப்பின் நமக்கு அசிடிட்டியும் ஏற்படுகிறது. காரமான உணவுகள் இந்த ஹார்மோனின் அளவை குறைக்கிறது, இதன் காரணமாக பசி விரைவில் அடங்குகிறது இதனால் நம்மால் குறைவான உணவையே சாப்பிட இயலும்,

அதேபோல இனிப்பான உணவுகள் இந்த ஹார்மோனின் அளவை சற்று அதிகப்படுத்துகிறது இதனால் "அதிகமாக சாப்பிட வேண்டும்" என்கிற எண்ணம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே பெரும்பாலான விருந்தோம்பலில் வாழை இலைகளில் முதலில் இனிப்பை வைப்பார்கள்.

வெந்தயம் இந்த ஹார்மோனின் அளவை குறைக்கிறது அதனால் இந்த ஹார்மோனின் அளவு அதிகமாக இருக்கும் பொழுது அசிடிட்டி ஏற்படாமல் இருக்க வெந்தயம் ஒரு சிறந்த மருந்தாகும்.

அதுமட்டுமில்லாமல் நமது உடலில் histamine என்கிற வேதிப்பொருளும் இயற்கையாகவே உள்ளது. இது தூண்டப்படும் போது வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை(HCl) உற்பத்தி செய்யும். histamine அதிகமாக
தூண்டப்பட்டும் போது நமது வயிற்றில் அதிக அளவில் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை உற்பத்தி செய்து வயிற்றில் அசிடிட்டியை ஏற்படுகிறது. histamine அதிகமாக தூண்டப்படுவதை கட்டுப்படுத்த cimetidine மற்றும் ranitidine என்கி்ற மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
Comments