
2003 ஆம் ஆண்டு நாம் எழுத பயன்படுத்தும் பென்சிலில் ஒரு சாதாரண மனிதரால் பிரித்தெடுக்கப்பட்டு நோபல் பரிசு பெற்ற ஒரு பொருள் தான் கிராஃபைன். இந்த பொருள் பார்ப்பதற்கு மிக மெல்லியதாக இருந்தாலும் இதனின் பயன்கள் ஏராளம். இதன் தன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

கிராஃபைன் பேப்பரை விட 10 லட்சம் மடங்கு மெல்லியதாக இருக்கும் தன்மை கொண்டது இதனால் இதனுடைய எடை மிக மிகக் குறைவு.

இருந்தாலும் வைரத்தை விட உறுதியானது அதுமட்டுமில்லாமல் 200 மடங்கு இரும்பை விட உறுதியானது.

நன்கு வளையும் தன்மை கொண்ட இந்த கிராஃபைன் காப்பரை விட அதிக அளவில் வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்தும் ஆற்றல் கொண்டவை.

ஒரு அணு அடர்த்தி கொண்ட இந்த கிராபைன் 98 சதவீத வெளிச்சத்தை இதனுள் ஊடுருவ செய்கிறது.
விலை உயர்ந்த மொபைல் போன் தொடு திரைகளில் கிராஃபைன் பயன்படுத்தப்படுகிறது.

கிராஃபைன் தண்ணீரை சுத்திகரிக்க கருவியாக பயன்படுகிறது இதனின் சிறப்பு என்னவென்றால் இதனுள் தண்ணீரை மட்டுமே ஊடுருவ செய்ய முடியும் மற்ற வாயுக்களோ அல்லது மற்ற திரவங்களால் இதனுள் ஊடுருவ முடியாது.

கிராஃபைனால் செய்யப்படும் பேட்டரிகள் அதிக நேரம் வேலை செய்யும் தன்மை கொண்டவை இது சிறியவையாக இருந்தாலும் அதிகமான மின்சாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை . இது எடை குறைவாக இருப்பது இதனின் மற்றொரு சிறப்பு.

நவீன மருத்துவத்துறையில் கிராஃப்பனை நமது உடலில் குறிப்பிட்ட பகுதியில் மருந்துகளை செலுத்துவதற்கு கருவியாக பயன்படுத்துகிறார்கள்.
Commentaires