
கொழுப்புக்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது
1) அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் (unsaturated fatty acids) உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு.
2) சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் (saturated fatty acids) உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பு.
3) டிரான்ஸ் கொழுப்புக்கள்(trans fats) மிகவும் ஆபத்தான ஒன்று.
இதைப் பற்றி இப்பொழுது சற்று விரிவாக பார்க்கலாம்.
1) அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள்(unsaturated fatty acids).

பொதுவாக இவ்வகையான கொழுப்புகள் பெரும்பாலும் தாவர வகைகளிலிருந்து வருபவை. அறையின் வெப்பநிலையில் (room temperature) திரவ நிலையில் இருக்கும்(in liquid state). இவ்வகையான கொழுப்புக்கள் நல்லெண்ணெய், கடலெண்ணெய், பாதாம் பருப்பு மற்றும் மற்ற பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணெய், மீன் மற்றும் காய்கறிகளில் முழுமையாக இவ்வகையான கொழுப்புகள் உள்ளது. இவ்வகையான உணவுப் பொருட்கள் நல்ல கொலஸ்ட்ராலை(HDL- high density lipoprotein) அதிகப்படுத்தி கெட்ட கொலஸ்ட்ராலை(LDL- low density lipoprotein) குறைக்கிறது. நல்ல கொலஸ்ட்ரால்(HDL) ரத்தத்தில் எளிதில் கரைந்துவிடும் இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. நல்ல கொலஸ்ட்ரால் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
2) சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் (saturated fatty acids).

இவ்வகையான கொழுப்புக்கள் பெரும்பாலும் விலங்குகள் மற்றும் அதன் சார்ந்த பொருட்களில் இருந்து வருபவை. பொதுவாக இவை திட நிலையில்(in solid state) இருக்கும். உதாரணமாக இவ்வகையான கொழுப்புகள் தேங்காய் எண்ணெய்,பால், தயிர், வெண்ணை, முட்டை சிக்கன், மட்டன் மற்றும் பல அசைவ உணவுகளில் உள்ளது. இவை கெட்ட கொலஸ்ட்ராலை(LDL) அதிகப்படுத்தி நல்ல கொலஸ்ட்ராலை(HDL) குறைத்து விடுகிறது. கெட்ட கொலஸ்ட்ரால் ரத்தத்தில் எளிதில் கரைவதில்லை இதனால் நாட்கள் செல்ல செல்ல ரத்த நாளங்களில் கொழுப்புகள் படிகிறது பிறகு இருதய அடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகப்படுத்துகிறது. இவ்வகையான உணவுகளை அதிகமாக உட்கொள்ளாமல் அளவோடு உட்கொள்வது மற்றும் உடல் பயிற்சியில் ஈடுபடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.
3) டிரான்ஸ் கொழுப்புக்கள் ( trans fats)

இவ்வகையான கொழுப்புக்கள் செயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது. பாமாயிலை ஒரு வேதியியல் வினையின் (hydrogenation) மூலமாக ட்ரான்ஸ் கொழுப்புகள் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக இவ்வகையான கொழுப்பு திட மற்றும் திரவ நிலையில் இருக்கும் ( அதாவது இரண்டும் கலந்த கலவையில் இருக்கும்). உதாரணமாக, வனஸ்பதி( Vanaspati) இவ்வகையான கொழுப்பு ஆகும். இவை தயாரிக்கப்படுவதற்கான நோக்கம்,
1) மிகவும் மலிவான விலை
2) நீண்ட நாட்கள் சேமித்து வைக்க முடியும்
3) இதனால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் பார்த்துக் கொள்ளும்
4) சுவையை தந்து மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும்.

பேக்கரியில் தயாரிக்கப்படும் தின்பண்டங்கள் மற்றும் பெரும்பாலான பாக்கெட்டுகளில் விற்கப்படும் தின்பண்டங்களுக்கு இவ்வகையான கொழுப்புக்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
இவை எல்லாவற்றையும் காட்டிலும் மிகவும் ஆபத்தானது. இவ்வகையான கொழுப்புகளை தவிர்த்தல் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"
இந்த நிலையற்ற உலகில் வரும் துன்பங்கள் கூட நிலையற்றது தான், இதுவும் கடந்து போகும் என்று வாழ்ந்தால் எதையும் எதிர்கொள்ள முடியும்.
உடல் ஆரோக்கியத்திற்கு உடல் பயிற்சியும்,யோகாவும் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு தியானம் செய்யுங்கள். உங்களது இந்த விலைமதிப்பற்ற ஆரோக்கியத்திற்காக தினமும் ஒரு மணி நேரமாவது செலவு செய்யுங்கள். இது உங்களின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட எனது அன்பான வேண்டுகோள்.
Comments